Adiyen presented the below paper on aruttha panchakam, a Tamil prabandham of Swami Desikan at Madurantakam Patashala on the 4th of December 2018 during the 750th birth anniversary celebrations of Swami Desikan. The paper below is in English but I presented it in Tamil with quotations from Nalayira Divya Prabandham and Desika Stotras and prabandham for better appreciation by the audience. The below sloka on Lord Rama of Madurantakam was composed and read by me during the presentation.

श्रीमन्तं तं धनुष्मन्तं रामानुजसमाश्रितम् ।
गतिमन्तं सतां मध्ये वन्दे सकरुणाकरम् ।।
(I salute him (Lord Rama) who is who is presiding (here at Madurantakam) along with Sri (Sita), Sri Ramanuja (one meaning Lakshmana, and other being Sri Ramanuja who underwent Samashrayana ceremony here), & Lord Karunakaran & who moves about in the hearts of his devotees.
Arutthapanchakam
Sri Vedanta Desika, a non-pareil multifaceted acharya of the Srivaishnava tradition is an author of more than a hundred literary compositions in different genres of literature in Sanskrit, Tamil and Manipravala, a mixture of Sanskrit and Tamil. His Tamil compositions do not match his Sanskrit compositions in terms of quantity but definitely do in terms of quality. His extraordinary ability to summarise abstruse Vedanta tattvas in chaste and poetic Tamil is one of his unique qualities. His Tamil compositions are hailed as Desika Prabandham.
Aruttha panchakam is one such composition in Tamil consisting of eleven verses which summarise the concept of arthapanchaka – a set of five doctrines or topics that a mumukshu, a seeker of liberation, must know according to Sri Vaishnava tradition. This composition is in kocchaga-kalippa meter and is dedicated to Lord Varadaraja, an incarnation of Lord Vishnu and who is the presiding deity of Perumal koil, Kanchipuram. Vishnu, along with Sri, His eternal consort, is Brahman or Paramatma and Lord Varadaraja is identified as Paramatma in this work. The subject matter of this work is elaborated in the 4th adhikara of his own another work, Srimad Rahasyatraya Sara, celebrated as his magnum opus.
Generally, whenever a man ardently desires to attain an object in life, he must thoroughly know about the object of desire, the ways and means to attain it, the potential obstacles in attaining and the consequences of attaining it. He may also try to know his own Self in relation to the object, so as to know if the desire is worth pursuing. These aspects are thoroughly discussed from the point of view of moksa, the ultimate desire of man, in aruttha panchakam.
Attaining Brahman, or constantly experiencing Brahman to be precise, is moksa according to Vedanta, and hence knowledge of Brahman is the first artha. The knowledge of one’s own Self, the attainer, is the second artha. The knowledge of the means to attain Brahman is the third artha. The understanding about the obstacles that have not led to attainment of moksa is the fourth artha and awareness about the nature of moksa itself is the fifth artha. These five together (panchakanm) are called as artha panchakam in Sanskrit and aruttha panchakam in Tamil.
All important aspects of the first artha, namely Brahman, its svarupa or essential nature, rupa or form, guna or attributes, vibhuti or wealth and ayudha or weapons are all discussed in the first two verses. Brahman possesses satyatva (ever unchanging in its nature), jnanatva (of the form of knowledge), ananta (being infinite in its nature), anandatva (blissful in nature) and amalatva (being pristine in its nature) as its svarupa. It has an auspicious transcendental rupa that matches the brilliance of its svarupa. Besides svarupa and rupa, Brahman possesses infinite number of auspicious gunas like jnana, bala, tejas etc. Its eternal abode, Srivaikuntha, and the manifested universe in which the jivatmas keep experiencing the results of their karma in a seemingly unending cycle of births and deaths, Prakrti, are his vibhutis – they are called nityavibhuti and lilavibhuti respectively. Further to the above, Brahman possesses several divine ayudhas among which five are quite popular and they usually adorn the vigraha of His beautiful archa forms in temples. Brahman, i.e Vishnu and Sri together, rules all sentient and non-sentient beings. It pervades all beings and resides in them as antaryami, and by whose will, the svarupa, existence and functioning of all the sentient and non-sentient beings depend upon. Brahman grants moksa to those who resort to It and propitiate It.
The third and the fourth verses delineate the svarupa of the Jivatma. That the Jivatma is different from his gross body, senses, mind, prana and intellect, and is of the form of jnana, with jnana as a guna, and is ever subservient to Paramatma, who resides as his antaryami, is the summary of the 3rd verse. In the 4th verse the experiences of a Jivatma in the lilavibhuti are highlighted. With a body granted by the will of Paramatma in accordance with his karma, the Jivatma, until the dawn of right jnana, is born repeatedly (acquires new bodies after the loss of previous ones) to experience the results of his karma and thus subjects himself to the travails of samsara. In this, he is led by Paramatma, who resides in him as antaryami. This becomes a lilarasa to Lord Varadaraja and his eternal consort.
The obstacles to the attainment of moksa are discussed in the 5th and 6th verses. The Jivatma, oblivious of his – liege and Lord – relation with the Paramatma, chooses, out of ignorance, to be subservient to another Jivatma, who is also just like him. Being unaware of the fact that his essential nature is completely different from that of his body, he identifies himself with his body and relishes the transient and insignificant pleasures arising out of it. Until he seeks the guidance of an acharya he slips further in to the nadir of samsara, despite the omnipresence of the ever-compassionate Lord. Karma is said to be the reason for this and thus it becomes the main obstacle in transgressing the ocean of samsara. The origin of karma cannot be ascertained as it follows the bija-ankura maxim – the inability in finding out which came first – the seed or sprout. The Jivatma, because of karma, takes up four types of bodies in the course of his experiencing the results of karma – of gods, men, animals and plants due to lack of knowledge to overcome karma. Eventually the Paramatma bails out those who resort to Him.
The 7th and 8th verses deal with bhaktiyoga and prapatti respectively that are the two means recommended by sastras to overcome samsara. Bhaktiyoga is defined on the lines of ashtanga yoga of Yoga sastra, Paramatma being the object of meditation. It consists of the following eight limbs – yama or controlling the external senses, niyama or controlling the internal senses, asana or getting accustomed to a comfortable body position to pursue further aspects of yoga, pranayama or mastering the flow of prana, pratyahara or withdrawing the senses from outward objects, dharana or focussing on the divine form of the Lord and his auspicious attributes, Dhyana or constant contemplation of the same and samadhi or the immediate experience of a glimpse of the vision of the Lord. Not all Jivatmas can embark upon the path of bhaktiyoga due to strict norms of eligibility, and to those who cannot prapatti is recommended as an alternate means, which is equally efficacious. Prapatti, which is usually done through an acharya, is first performed at the lotus feet of Sri or Lakshmi, who is ever accompanying the Lord and who is ever compassionate without a reason. This is called as purushakara prapatti. With her grace on his side the Jivatma then approaches the Lord and performs prapatti adhering to the five limbs of prapatti. The Lord, pleased with the performance of either bhaktiyoga or prapatti grants moksa to the Jivatmas as and when it is desired by them or at the destruction of prarabda karama to be precise. It is at the end of the that life in which prapatti was performed in the case of prapannas.
The 9th and 10th verses describe the journey of the Jivatma to the eternal abode of the Lord and the nature of moksa. The Jivatma, who has earned the grace of Lord and having got rid of all his karma, leaves his confines of his body through the sushumna nadi, a subtle channel that leads to the path of moksa. In this final journey he is accompanied and guided by divine agents of the Lord and is taken through the worlds that appear in the way. He then reaches the nityavibhuti or Srivaikuntha only to shine in his pristine natural form and, along with eternal and other liberated Jivatmas, revels in performing all kinds of kainkarya or services, which were hitherto lost by him, to the Supreme Lord and his divine consort, who independently rules over his two vibhutis forever.
Through the 11th verse, which is the concluding verse, Sri Vedanta Desika submits that he has composed the work with the grace of those Vedic scholars who were blessed devotees of Lord Varadaraja of Kanchipuram, who was indeed propitiated by Brahma himself, and in stating the doctrines therein he has only followed the footsteps of his preceptors. He has placed this work at the lotus feet of Lord Varadaraja who is ever united with his divine consort, Sri. To those who recite the decad, this work will bestow all good, and to the learned scholars who read, it will give a sense of joy.
Here ends a brief outline of the Tamil prabandham by name Arutthapanchakam composed by Sri Nigamantha Mahadesikan.
Dr.Sreeram Jaganathan
———
Herewith adiyen is attaching an article on Arutha Panchakam in Tamil by Adiyen’s Kalakshepa Acharyan – Paruthipattu Devanarvilagam Vangipuram Dr.S.Padmanabhachariar, Srikaryam, Sri Ahobila mutt. It was a contribution for a malar commemorating Swami Desikan’s 750th birth centenary celebrations.
ஶ்ரீ:
ஶ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தத்தை நன்கு அறிய விருப்பமுள்ளவன், முதலில் ஐந்து அர்த்தங்களை நன்கு அறிந்து கொள்ளவேண்டும். இதை ‘அர்த்தபஞ்சகம்’ என்று பூர்வாசார்யார்கள் எடுத்துரைத்தார்கள். இதை விளக்கும் ஶ்லோகமும் பாசுரமும் முறையேயாவன:
‘ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம்நப்ராப்து: ப்ரத்யகாத்மன: ।
ப்ராப்த்யுபாயம் பலம் சைவ ததா ப்ராப்திவிரோதி ॥
இதி வதந்தி ஸகலா வேதாஶ்சேதிஹாஸபுராணா:
மிக்க இறைநிலையும், மெய்யாமுயிர்நிலையும்
தக்கநெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ……..
இவ்வைந்து அர்த்தங்களையும் ஸ்வாமி ஶ்ரீதேஶிகன் எவ்வாறு ‘அருத்த பஞ்சகம்’ என்னும் ப்ரபந்தத்தில் அநுஸந்தித்திருக்கிறார் என்று காண்போம். இப்பிரபந்தத்தில் மொத்தம் 11-பாசுரங்கள் உள்ளன. முதல் இரண்டு பாசுரங்களால் அடையப்பட்டவேண்டியதான பரமாத்மாவின் (ப்ராப்யமான) ஸ்வரூபம் விளக்கப்படுகிறது.
- அமலன் அவியாத சுடர் அளவில்லா வாரமுதம்
அமலவுருக்குணங்கள் அணியாயுதங்கள் அடியவர்கள்
அமலவழியாத நகரழிந்தெழுங்காவுடனெல்லாம்
கமலையுடன் அரசாளும் கரிகிரிமேற்காவலனே
அழகான பாசுரம், அனைத்து எழுத்துக்களுக்கும் மூலகாரணமான ‘அ’ எழுத்தில் ஆரம்பிக்கப்படுகிறது. அனைத்து பாசுரங்களும் ஹஸ்திகிரி நாதனான தேவப்பெருமாளுக்கு துதியாக அமைந்துள்ள அழகு நோக்கத்தக்கது. இப்பாசுரத்தின் கருத்தாவது:
காஞ்சி அத்திகிரியில் நித்யவாஸம் செய்தருளும் ஸர்வரக்ஷகனான எம்பெருமான் தோஷங்களற்றவன், அழிவில்லததான தேஜஸ்வரூபன், ஜ்ஞாந ஸ்வரூபன், ஸ்வயம் ப்ரகாஶன், அளவிட முடியாததான இனிய அமுதத்தைப்போன்ற ஸ்வரூபம் கொண்டவன். திவ்யமங்கள ஸ்வரூபம், மற்றும் கல்யாண குணங்கள், திருவாபரணங்கள், திவ்ய ஆயுதங்களை உடையவன். தனக்கு தாஸர்களாக உள்ள ஜீவாத்மாக்கள் அனைவரையும் அழிவற்ற நித்யவிபூதியான ஶ்ரீவைகுண்டத்தையும், அழிந்து மறுபடியும் தோன்றக்கூடிய இந்த லீலா விபூதியையும், பெரியபிராட்டியுடன் கூட நியமித்து ஆள்வார்.
இரண்டாவது பாசுரம்:
- உள்ள பொருளனைத்துக்கும் உருவநிலை கருமங்கள்
தெள்ளிசையின் வசமாக்கித் திகழ்ந்து உயிராயுறைகின்றான்
நள்ளிருள் தீர்த்து அடியவர்க்கு நலங்கொடுக்குந் திருவுடனே
வள்ளலருளாளரரென்றும் வாரணவெற்பிறையவனே
ப்ரமாணங்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லா வஸ்துக்களுடைய ஸ்வரூபம், இருப்பு, செயல்பாடுகள் இவைகளை தன் ஸங்கல்பத்தினால் அதீனமாக்கி, அந்த வஸ்துக்களில் அந்தர்யாமியாய் பேரருளாளனான ஹஸ்திகிரிநாதன் லக்ஷ்மீதேவியுடன் கூடியிருந்து தன்னை ஆஶ்ரயித்தவர்களுடைய அஜ்ஞானத்தை நீக்கி ஆனந்தமாகிய மோக்ஷத்தைக் கொடுப்பவன்.
மேற்கூறிய இரண்டு பாசுரங்களாலும் ‘ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம்’ என்பதன் பொருள் விளக்கப்பட்டது. அதாவது ப்ரஹ்மத்தின் ஸ்வரூபம் ஜ்ஞாநாநந்த ஸ்வரூபம், மற்றும் அவன் பிராட்டியுடன் கூடின திவ்யமங்கள விக்ரஹத்தைக்கொண்டவன் என்றும், தன்னை அண்டியவர்களுக்கு ஸம்ஸாரத்தை நீக்கி மோக்ஷம் அளிப்பவன் என்றும் கூறப்பட்டது.
இனி அடுத்த இரண்டு பாசுரங்களால் ஜீவாத்மாவின் ஸ்வரூபம் விளக்கப்படுகிறது.
- பூதவுடல் புலன்கள் மனம் புல்லாவி புந்தியென்னும்
யாதுமலனாய் இலகி யானென்னும் இன்நுண்ணறிவாய்
சேதனனாய் அடிமையுமாய் உயிர்க்கெல்லாம் திண்ணுயிராய்த்
தீதலின்றித் திகழும் சீர் அத்திகிரித்திருமாலே
சிறப்புப்பொருந்திய ஸகல குணகணனான ஹஸ்திகிரிநாதன், பஞ்ச பூதங்களின் மாறுபாடான ஶரீரம், புலன்கள் மனம், ப்ராண வாயு, புத்தி முதலியவற்றிலிருந்து வேறுபட்டவனாய், ‘நான்’ என்று தோன்றுகின்ற அணு ஸ்வரூபனும், ஆனந்த ஸ்வரூபனும், ஜ்ஞான ஸ்வரூபனுமானவனும், தாஸ ஸ்வரூபனுமான ஆத்மாக்கள் அனைத்துக்கும் நித்யமான அந்தர்யாமியாய், அவற்றிற்கு ஆத்மாவாக இருந்த போதிலும், அவைகளின் தோஷம் அற்றவனாக ப்ரகாசிக்கும் தன்மையைக் கொண்டவன்.
- தானடைந்த குணங்கருவித் தன் கிரிசை வழியொழுக்கி
ஊனெடுத்து உண்டுமிழ்ந்து உழலும் உயிர்க்கெல்லாமுயிராகிக்
கானடத்திக் கமலையுடன் கண்டுகந்து விளையாடும்
தேனெடுத்த சோலைகள் சூழ் திருவத்தியூரானே
தேன் நிறைந்திருக்கின்ற சோலைகளால் சூழப்பட்ட நந்தவனங்களை உடைய ஹஸ்திகிரிநாதன் ஜீவாத்மாக்களை தன்னால் கொடுக்கப்பட்ட குணம், மற்றும் புலன்கள் முதலியவற்றை அவரவர் செய்த கர்மங்களுக்கு ஏற்ப வழிநடத்தி மாம்ஸமான ஶரீரத்தை ஏற்படுத்தி, இன்ப துன்பங்களை அனுபவிக்கும்படி செய்து, மறுபடியும் அவைகளை ஏற்று உழல்கின்ற ஜீவாத்மாக்களுக்கு ஆத்மாவாக இருந்து ஸம்ஸாரம் என்னும் காட்டில் வழிநடத்தி பிராட்டியுடன் இன்புறும் இவ்விளையாட்டுடையவன்.
மேற்படி காட்டிய பாசுரங்கள் ஜீவாத்மாக்களின் தன்மையையும் அவர்கள் எம்பெருமானுக்கு வசப்பட்டவர்கள் என்பதும், அவர்களுக்கு எம்பெருமான் கர்ம பலன்களை பக்ஷபாதமின்றி கொடுப்பவன் என்பதும், ‘மெய்யாம் உயிர்நிலை’ என்பதன் பொருள் விளக்கப்பட்டது.
அடுத்துவரும் இரண்டு பாசுரங்கள் மோக்ஷவிரோதியை குறிப்பிடுகின்றது. அதாவது மோக்ஷத்தை அடைவதற்கான தடங்கல்கள் எவை என்பதை விளக்கும் பாசுரங்கள்.
- உய்யும் உறவிசையாதே ஒத்தவர்க்கேயடிமையுமாய்
பொய்யுருவை தனக்கேற்றிப் புலன்கொண்ட பயன்கொண்டு
ஐயுறவும் ஆர்இருளும் அல்வழியும் அடைந்தவர்க்கு
மெய்யருள் செய்திடும் திருமால் வேழமலை மெய்யவனே
ஹஸ்திகிரிநாதனான தேவாதிராஜன், ஜீவாத்மாவான தான், நன்கு உய்வதற்கு உண்டான, தனக்கும் எம்பெருமானுக்கும் உள்ள சேஷ-சேஷி பாவ ஸம்பத்தத்தை அஜ்ஞானத்தினால் அறியாமல் தன்னைப்போல் இருக்கிற ஸம்ஸார பந்தத்தில் உள்ள மற்றொரு ஜீவாத்மாவிற்கு தாஸனாக எண்ணுகிறான். மேலும் தனக்கு இல்லாத தன்மைகளை, அதாவது ஶரீரத்தையே ஆத்மாவாக எண்ணுதலையும், இந்திரிய போகங்களையே அங்கீகரித்து ஈடுபடுகிறான். இப்படிப்பட்ட ஆத்மாக்களை ஶ்ரிய:பதியான எம்பெருமான் க்ருபையுடன் நல்வழிப்படுத்துகிறான்.
- விதைமுலை நியாயத்தால் அடியில்லா வினையடைவே
சதையுடல நால்வகைக்குஞ் சரணளிப்பான் எனத்திகழ்ந்து
பதவி அறியாது பழம் பாழில் உழல்கின்றார்க்கும்
சிதைவில் அருள்தரும் திருமால் திருவத்திநகரானே
பேரருளாளனான ஶ்ரீஹஸ்திகிரிநாதன் பீஜாங்குர ந்யாயத்தின் (விதைமுளை) தொடக்கமில்லாததான (அநாதியான) கர்மங்களை அநுஸரித்து, நான்கு வகைப்பட்ட (தேவ, மநுஷ்ய, திர்யக், ஸ்தாவரங்கள்) மாம்ஸயமயமான ஶரீரத்திற்கும் ரக்ஷணத்தைச் செய்வான். இவ்வாறு உபாயத்தை அறியாமல், ஸம்ஸாரத்தில் பிறப்பு, இறப்பு என்று உழல்கின்ற ஜீவாத்மாக்களுக்கும் அருள் பாலித்து ஸம்ஸாரபந்தத்தை நீக்குவான்.
இனிமேல் இரண்டு பாசுரங்களில் மோக்ஷத்தை அடையும் உபாயமாகிய பக்தி, ப்ரபத்தி இவற்றின் ஸ்வரூபம் விளக்கப்படுகிறது.
- யம நியம உபாஸநங்கள் இயலாவி புலனடக்கம்
தமதறியும் தாரணைகள் தாரை அறா நினைவொழுக்கம்
சமமுடைய சமாதி நலம் சாதிப்பார்க்கு இலக்காகும்
அமரர் தொழும் அத்திகிரி அம்புயத்தாளரமுதே
தேவர்களால் வணங்கப்படுகிற ஹஸ்திகிரியில் வாஸம் செய்யும் பெரியபிராட்டிக்கு நிறைந்த அமுதம் போன்று போக்யமாயுள்ள வரதன், யம, நியம, ஆஸநங்கள் என்ற எட்டு பிரிவை (அங்கங்களை) உடைய பக்தியோகத்தில் புலனடக்கம், திவ்யமங்கள விக்ரஹ த்யானம், இடைவிடாது செய்யக்கூடிய ஸ்ம்ருதி, இவற்றின் தொடர்ச்சியால் ஏற்படும் மன அடக்கம், அமைதி, இவற்றிற்கு இலக்காக, த்யானத்தினால் தெளிவாக காணத்தக்கவன் (அறியத்தக்கவன்).
- புகல் உலகில் இல்லாது பொன்னருள் கண்டு உற்றவர்க்கும்
அகலகில்லா வன்பர்க்கும் அன்றே தன்னருள் கொடுத்துப்
பகலதனால் பழங்கங்குல் விடிவிக்கும் பங்கயத்தாள்
அகலகில்லேன் என்றுறையும் அத்திகிரி அருள்முகிலே
தாமரை மலரில் நித்யவாஸம் செய்தருளும் திருமகள் ‘ஒரு கணமும் பிரியமாட்டேன்’ என்று வாஸம் செய்யப்பெற்றவனான கருணை நீரை வர்ஷிக்கும் மேகம் போன்றவனான ஹஸ்திகிரிநாதன் , தம்மால் கடைபிடிக்க முடியாததான வேறு உபாயத்தை இவ்வுலகில் காணாமல், அனைத்து புருஷார்த்தங்களுக்கும் ஸாதனமான எம்பெருமானுடைய க்ருபாதிசயத்தை ஶாஸ்த்ரத்தினால் அறிந்து, எம்பெருமானை ஆஶ்ரயித்தவர்களுக்கும், அவனை விட்டு பிரிய முடியாமல் பக்தியுடன் கூடியவர்களுக்கும், அவர்கள் வேண்டிய காலத்திலேயே தன்னுடைய க்ருபையை கொடுத்து மோக்ஷம் என்னும் பகல் பொழுதால் மிகப்பழமையான அநாதியான ஸம்ஸாரமாகிற இருளை நீக்கி விடியச்செய்பவன்.
இப்பாசுரத்தில் ஶரணாகதி, அவற்றின் வகைகள் அது பலன் தரும் காலம் முதலியன விளக்கப்பட்டது. இதனால் ப்ராப்தி உபாயம் (தக்க நெறியும்) என்பது கூறப்பட்டது.
இனி இரண்டு பாசுரங்களால் மோக்ஷத்தின் ஸ்வரூபம் விளக்கப்படுகிறது.
- இருவிலங்கு விடுத்து இருந்த சிறைவிடுத்து ஓர் நாடியினால்
கருநிலங்கள் கடக்கும் வழி காவலராற் கடத்துவித்துப்
பெருநிலங்கண்டு உயிர் உணர்ந்து பிரியாமல் அருள் செய்யும்
உருநிலங்கொண்டு உறுந்திருவோடுயரத்திகிரியானே
தனக்குகந்த திருமேனியையும், ஆனந்தத்தையும் கொண்டு, தனக்கு எல்லாவிதத்திலும் பொருத்தமான பெரியபிராட்டியுடன் உயர்ந்த ஹஸ்திகிரிநாதன், உபாயத்தை அநுஷ்டித்த ஜீவாத்மாவை புண்ணியம், பாவம் என்ற இரண்டு விதமான விலங்கிலிருந்து விடுவித்து, மூர்தண்ய நாடியினால் ஶரீரமாகிற சிறையிலிருந்து வெளிக் கொணர்ந்து கர்ப்பவாஸமாகிற ஸம்ஸாரலோகங்களை தாண்டிச் செல்லும் வழியான அர்ச்சிராதி வழியில் ஆதிவாஹிகர்களால் தாண்டும்படி செய்து தன்னுடைய பெரிய இருப்பிடமாகிய நித்ய விபூதியை காணும்படி செய்து, ஜீவாத்மாவின் உண்மையான ஸ்வரூபத்தை அறியும்படி உணர்த்தியருள் செய்து விட்டுப்பிரியாமல் (மறுபடி திரும்பாதபடி) செய்யும் அருளுடையவன்.
- தம் திருமாதுடனே தனியரசாய் உறைகின்ற
அந்தமில் பேரின்பத்தில் அடியவரோடு எமைச்சேர்த்து
முந்தியிழந்தனவெல்லாம் முழுக்கத்தந்து ஆட்கொள்ளும்
அந்தமில்லா அருளாழி அத்திகிரித் திருமாலே.
அளவில்லாத கருணைக்குக் கடலாகிய ஹஸ்திகிரியில் தம்முடைய பிராட்டியுடனே ஒப்பற்ற வாசம் செய்யும் வரதன் அளவில்லாத பேரின்பமயமான ஆனந்தம் நிறைந்த ஶ்ரீவைகுண்டத்தில் நித்யஸூரிகள், முக்தர்களோடு நம்மை ஒன்று சேர்த்து முன்பு இழந்த தொண்டுகளையெல்லாம் கொடுத்து நம்மை அங்கீகரிப்பான்.
முடிவாக பலஶ்ருதியாக ஒரு பாசுரத்தை ஸ்வாமி அருள்கிறார்.
- அயன் பணியும் அத்திகிரி அருளாளர் அடியிணைமேல்
நயங்கள் செறி கச்சிநகர் நான்மறையோர் நல்லருளால்
பயன்களிவையனைத்தும் எனப் பண்டுரைத்தார் படியுரைத்த
வியன்கலைகள் ஈரைந்தும் வேதியர்கட் கினியனவே
சதுர்முகனால் ஆராதிக்கப்பட்டு கரிகிரிமேல் தோன்றிய தேவாதிராஜனின் இரண்டு தாமரைத் திருவடிகள் விஷயமாக நன்மதி பொருந்திய காஞ்சிமாநகரில் வாசம் செய்யும் நான்மறை அறிந்த சான்றோர்களுடைய அருளால் மேற்கூறிய பத்து பாசுரங்கள் முழுவதும் நிறைந்த ப்ரயோஜனங்கள் கொண்டவை என்று எண்ணி பூர்வாசார்யர்கள் செய்த உபதேசத்தையொட்டி மேற்கூறிய பத்து பாசுரங்களும் வேதம் அறிந்த சான்றோர்க்கு மிகவும் போக்யமானவை.
இவ்வைந்து அர்த்தங்களையும் ஸ்வாமிதேசிகன் தம்முடைய ஶ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்தில் அர்த்தபஞ்காதிகாரத்தில் முடிவாக சாதிக்கும் பாசுரமும் இங்கு அனுஸந்திக்கத்தக்கது.
பொருளொன்றென நின்ற பூமகள் நாதன் அவனடிசேர்ந்து
அருளொன்றும் அன்பன் அவன் கொளுபாயம் அமைந்த பயன்
மருளொன்றிய வினை வல்விலங்கென்று இவையைந்தறிவார்
இருளொன்றிலாவகை என் மனம் தேற இயம்பினரே.
ஸ்வாமி ஶ்ரீதேஶிகனுடைய 750 வது திருநக்ஷத்ரமஹோத்ஸவத்தை முன்னிட்டு வெளியிடப்படும் இம்மலரில் இந்த கட்டுரையை ஸமர்ப்பிப்பதன் மூலம் அடியேன் ஸத்தையை பெறுகிறேன்.
Paruthipattu Devanarvilagam Vangipuram Dr.S.Padmanabhachariar,
Srikaryam,Sri Ahobila mutt